புதன், 29 ஏப்ரல், 2015

கோடைக் கால செம்பருத்தி ஜூஸ்


செம்பருத்திப்பூக்கள் & 15
சர்க்கரை & கிலோ
முதலில் செம்பருத்திப்பூவை எடுத்து காம்புப்பகுதி, மகரந்தம் இவற்றை நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் தனியே வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் அரைலிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைத்து அதில் பூவிதழ்களைப் போடவும். தண்ணீர் சிவப்பாக மாறி இதழ்கள் வெந்ததும், ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆற வைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி தாரளமாக நீர் ஊற்றி பாகு வைக்கவும். பிறகு அதையும் அற வைக்கவும்.
இரண்டையும் ஒன்றாகக் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு, தேவையானபோது தண்ணீரில் கலந்து அருந்தலாம்.
குளிர்ச்சியாக வேண்டுபவர்கள் ஃபிரிட்ஜில் வைத்திருந்து பருகலாம். உடற்சூட்டைத் தணித்து, குளிர்ச்சி தரக்கூடியது இந்த செம்பருத்தி ஜூஸ். அதனால் கோடைக்கேற்ற சிறந்த குளிர் பானம் இது.