ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

கோடைக்காலத்தில் பரவும் சின்னம்மை- பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கோடைக்காலம் என்றாலே மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகுவார்கள்.
உடற்களைப்பால் ஏற்படும் சோர்வு, வியர்க்குரு, வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்களால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
இதில், சின்னம்மை மிகவும் அபாயகரமானது, உடல் முழுவதும் கொப்பளங்களை ஏற்படுத்திவிடுகிறது.
சின்னம்மையை முதல் முதலில் அடையாளம் கண்டுபிடித்தவர் (1510-1580) மருத்துவர் Giovanni Filippo Ingrassia ஆவர்.
பரவும் விதம்
varicella-zoster virus எனும் வைரசால் பரவும் சின்னம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.
இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது, மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுவதால் அவர்களின் உமிழ்நீர், சளி மற்றவர்கள் மீது படுவதாலும் பரவுகிறது.
மிக எளிதில் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஓய்வெடுத்துவிட்டு நன்கு குணமான பின்னரே வெளியில் செல்ல வேண்டும்.
அறிகுறிகள்
சின்னமையால் பாதிக்கப்பட்டால் உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் கொப்பளங்கள், அரிப்பு ஏற்படும்.
கொப்பளங்கள் ஏற்பட்ட 2, 3 நாட்களுக்குள் அவை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி பார்ப்பதற்கு தடிமனாக இருக்கும்.
நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் 102°F இருத்தல்.
இருமல் மற்றும் சுவாசிக்க முடியாமல் திணறுதல்.
அரிப்பு ஏற்படும் இடங்களில் சொரியும் போது மஞ்சள் நிறத்தில் சீல் வடிதல்.
வெளிச்சமான பகுதியை பார்ப்பதற்கு சிரமப்படுதல்.
நடப்பதற்கு சிரமப்படுதல், அதிகமாக வாந்தி எடுத்தல்.
அதிகமான தலைவலி, கழுத்து விறைப்பாக இருத்தல்.
சில சமயங்களில் இந்த நோயின் தாக்கம் தீவரமடைந்துவிட்டால் நுரையீரல், எலும்புகள் போன்ற இடங்களை தாக்கும்.
சிகிச்சை முறைகள்
சின்னம்மையால் பாதிக்கப்பட்டால் antibiotics மருந்தினை உட்கொள்ளலாம். ஏனெனில் ஆன்டிபயாடிக்ஸ் கொப்பளங்கள், அரிப்பு போன்றவற்றை குணமாக்கவல்லது,
சின்னம்மையின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஆன்டிவைரல்(antiviral) மருந்தினை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
ஆனால் அஸ்பிரின்(Aspirin) மருந்து பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் தீவிர நோயான Reye syndromeக்கு இது மருந்தாக பயன்படுகிறது.
அதனால் இதனை பயன்படுத்தும்போது, கல்லீரல் பாதிப்பு ஏற்படும், மேலும் இறப்பிற்கும் வழிவகுக்கும்.
மேலும் உடலில் அரிப்பு ஏற்படும் போது நாம் அந்த இடத்தினை சொரிந்து விடுகிறோம்.
ஆகவே, இந்த இடங்களில் ஏற்படும் அரிப்பினை தடுப்பதற்கு Hydrocortisone என்ற க்ரீம்மினை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தடுக்கும்முறை மற்றும் உணவுகள்
சின்னம்மை தடுப்பூசி 99% குழந்தைகளை இதன் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.
12 முதல் 15 மாத குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி இரண்டு தடவை போட வேண்டும், இந்த தடுப்பூசி 4 முதல் 6 வயது வரை குழந்தைகளை சின்னம்மை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
இதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்கு நீங்கள் வெளியில் சென்று வந்தால் நன்கு கை கழுவிய பின்பு சாப்பிடுதல், நன்கு குளிப்பது போன்றவையை செய்தாலே போதும்.
நாம் பயன்படுத்தும் பொருட்கள், அணியும் ஆடைகள் என அனைத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும்.
வேப்பிலை, சின்ன வெங்காயம் சின்னம்மைகான சீரிய மருந்தாக கருதப்படுகிறது.
கோடைக்காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதனை குணப்படுத்துவற்காக இளநீர், ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழவகைகள் மோர், தயிர், பழைய சாதம் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.
கோடைக்காலத்தில் பரவும் சின்னம்மை- பாதுகாத்துக் கொள்வது எப்படி?