துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்???
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பெண்மணி அருகே சென்றார்கள்.
அந்தப் பெண், (இறந்துபோய்விட்ட) தன் குழந்தை அருகே அழுதுகொண்டிருந்தாள்.
அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”அல்லாஹ்வை அஞ்சிக்கொள்.
பொறுமையாக இரு” என்று கூறினார்கள்.
அதற்கு அப்பெண் ”என் துயரத்தை நீங்கள் உணரவில்லை” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றதும் அப்பெண்ணிடம் ”அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)” என்று சொல்லப்பட்டது.
அப்பெண்ணுக்கு மரணமே வந்துவிட்டதைப் போன்று வருத்தம் ஏற்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுவாசலுக்கு வந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டுவாசலில் வாயிற்காவலர் எவரும் இருக்கவில்லை.
அப்பெண் ”அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களை (யாரென) அறியவில்லை” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
”பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதாகும்” என்று கூறினார்கள். -
மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துஸ் ஸமத் பின் அப்தில் வாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ”நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறை (கப்று) அருகில் இருந்து (அழுது)கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்றார்கள்”
என ஹதீஸ் துவங்குகிறது.
ஸஹீஹ் முஸ்லிம் 1686
அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்