புதன், 15 ஏப்ரல், 2015

முளைகட்டிய பயறின் முக்கியத்துவம்!


தேவையான பயறை வாங்கி வந்து அதனை இரவில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்துவிட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். இதைத்தான் முளைகட்டிய பயறு என்கிறோம்.
முளை கட்டிய பயறில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன. அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும்.
100 கிராம் முளைகட்டிய பயறில் 30 கலோரிகள், 3 கிராம் புரதச்சத்து,6 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து உள்ளன.
அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டிய பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.