பேஸ்புக்கில் உலா வரும் ஆபாச படங்கள்? பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை
தற்போதைய காலக்கட்டத்தில் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மூலம் எழும் பிரச்சனைகள் அதிகமாகி வருகிறது.
முகம் தெரியாத விஷமிகள் பலரும் இருக்கும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் விளையாட்டாக சிலர் பதிவேற்றும் புகைப்படங்கள் அவர்களுக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.
சமூக வலைதளங்களில், தங்களின் படங்களை பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிய வண்ணம் உள்ளன.
இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க படங்களை பதிவேற்றம் செய்யாமல் இருப்பது சிறந்தது.
தனிமையில் ஒவ்வொரு மனிதனும் தங்களது உடல் அழகை ரசிப்பது சாதாரண விடயம்தான். முன்பு கண்ணாடியில் பார்த்தோம், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்ஃபிக்கள், வீடியோக்கள் என எடுத்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது.
சமூகவலைத்தளங்கள் மூலம் பெறப்படும் புகைப்படங்களானது சில ஆபாச தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டு மார்பிங் (Face Morphing) என்னும் தொழிநுட்பம் மூலம் ஆபாச புகைப்படமாக மாற்றப்படுகிறது.
`Face Morphing’ என்றால் என்ன?
கணனியில் அனிமேஷன் நுட்பங்களை பயன்படுத்தி ஒரு புகைப்படத்தை படிப்படியாக முற்றிலும் மற்றொரு புகைப்படமாக மாற்றும் முறையே `Face Morphing’ தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தில் 3 முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
Pre- process
இந்த முறையில் சில தேவையில்லாத பகுதிகள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்த புகைப்படமானது பட்டை தீட்டப்படுகிறது. அடுத்த முறைக்கு இந்த புகைப்படத்தை கொண்டு செல்ல சரியான அளவில் மாற்றியமைக்கப்படுகிறது.