சனி, 2 ஏப்ரல், 2022

சிலிண்டர் விலை ரூ.269 உயர்வு

 1 4 2022

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 269 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 269 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் அதன் விலை ரூ. 2,406 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டின் 27 சுங்கச்சாவடிகளில் 10 சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள்
உள்ளன. இவற்றில் 27 சுங்கச்சாவடிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்று அதிகாலை முதல் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில், சராசரியாக 10 சதவீதம் அதாவது, 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

இதேபோல், இன்று முதல் பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை உயர்கிறது. இந்தியாவின் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களில் சுமார் 800 மருந்துகளின் விலை தற்போது உயர்த்தப்படுகிறது. இவற்றின் விலை 10 புள்ளி 7 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காய்ச்சல், இதய நோய், ரத்த அழுத்தம், தோல் நோய் போன்ற முக்கியமான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை உயர்கிறது. பணவீக்கம் அதிகரித்து வருவதே மருந்துப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

source https://news7tamil.live/commercial-gas-cyluinder-price-hiked-upto-269-ruppees-in-india.html