சனி, 12 அக்டோபர், 2024

கவரப்பேட்டை ரயில் விபத்து – 18 ரயில்கள் ரத்து!

 

கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக, 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8.30 மணியளவில் விபத்தில் சிக்கியது.

11/10/24

இதில் இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதனால் 4 தண்டவாளங்கள் சேதமடைந்தன. தொடர்ந்து பெட்டிகளை அகற்றும் பணியிலும், தண்டவாளங்களை சரிசெய்யும் பணியிலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவுமுதல் தற்போதுவரை மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு;

திருப்பதி – புதுச்சேரி மெமு ரயில் – 16111

புதுச்சேரி – திருப்பதி மெமு ரயில் 16112

சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் – 16203

திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் – 16204

சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் – 16053

திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் – 16054

சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் – 16057

திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் – 16058

அரக்கோணம் – புதுச்சேரி மெமு ரயில்

கடப்பா – அரக்கோணம் மெமு ரயில்

சென்னை சென்ட்ரல் – திருப்பதி மெமு

திருப்பதி – சென்னை சென்ட்ரல் மெமு ரயில்

அரக்கோணம் – திருப்பதி மெமு ரயில்

திருப்பதி – அரக்கோணம் மெமு ரயில்

விஜயவாடா – சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில், 

சென்னை சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்

சூலூர்பேட்டை – நெல்லூர் மெமு எக்ஸ்பிரஸ்

நெல்லூர் – சூலூர்பேட்டை மெமு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 18 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள்;

  • கன்னியாகுமரி – நிசாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் – 12641.

சென்னை சென்ட்ரல் – லக்னோ சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் – 16093. 

சென்னை சென்ட்ரல் – நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் – 12611

ஹவுராவுக்கு புறப்பட்ட சென்னை சென்ட்ரல் மெயில் – 12839

அகமதாபாத் – சென்னை சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ் – 12655

பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் – 22644

புது டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் – 12616

காக்கிநாடா துறைமுகம் – செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் – 17644 

source https://news7tamil.live/kavarappettai-train-accident-18-trains-cancelled.html