புதன், 16 அக்டோபர், 2024

24 மணி நேரமும் #Aavin பால் கிடைக்க ஏற்பாடு!

 

24 மணி நேரமும் ஆவின் பால் கீழே உள்ள இடங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழையானது இன்னும் நிற்காமல் பெய்தபடியே இருந்துவருகிறது. இன்றிரவு முழுவதும் மேகம் வலுவடைந்து அதி கனமழை இருக்கும் என கூறப்படும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னைக்கு நாளை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கும் சூழலில், பொதுமக்களுக்கு பால் விநியோகம் எந்த வகையிலும் தடைபடாத வகையில், சென்னையில் 24 மணிநேரமும் பால் விநியோகம் நடைபெறும் இடங்களை ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, அம்பத்தூர், அண்ணா நகர், மாதவரம், பெசன்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய எட்டு இடங்களில் ஆவின் பால் கிடைக்கும். மேலும், சென்னை மெட்ரோ நிலையங்களிலுள்ள அனைத்து ஆவின் பார்லரில் பால் கிடைக்கும் என்று ஆவின் தெரிவித்திருக்கிறது.


source https://news7tamil.live/24-hour-availability-of-milk.html

Related Posts: