தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டி.ஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
அடிப்படை ஊதியம்/ ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 50%-க்கு மேலாக இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி (டி.ஏ) விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் என்று மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பலன் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். மேலும், கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ. 9,448.35 கோடி செலவாகும். இந்த நடவடிக்கையால் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி இந்த உயர்வு உள்ளது.
முன்னதாக மார்ச் மாதம், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
source https://tamil.indianexpress.com/india/cabinet-approves-3-per-cent-dearness-allowance-hike-for-central-govt-employees-7319650