புதன், 15 ஜனவரி, 2025

ஜனவரி 22-ல் முற்றுகை: பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

 

seeman

சீமான் வீடு முற்றுகையிடப்படும் - திருமுருகன் காந்தி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரியார் குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

மேலும், காவல் நிலையங்களுக்கும் சீமான் மீது 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் வருகிற 22-ம் தேதி சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-followers-federation-to-protest-at-seemans-residence-on-jan-22-8622414

Related Posts: