சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கள ஆய்வுக்காக சிவகங்கை வந்தார். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மாணவிகளிடம் உரையாடினார்.
தமிழக அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து மாணவிகள் முதலமைச்சரிடம் சரளமாக பேசினர். அப்போது மாணவி கோபிகா என்பவர் தமிழக அரசு கொண்டுவந்த திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். இதன்பின்னர், மாணவி ஒருவர் பேருந்து நிறுத்தம் தொடர்பாக கோரிக்கை வைத்தார்.
கல்லூரி அமைந்துள்ள இடத்தில் இருந்து சிவகங்கைக்கு செல்ல அங்கு பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தினால் பெரும் அவதியுறுவதாக கோரிக்கை வைத்தார். மாணவி கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த கல்லூரி அருகே பேருந்துகள் நின்று செல்வதற்கு ஏற்ப போர்டுகளை உடனடியாக வைத்தனர். மேலும், பேருந்துகள் அந்த கல்லூரி அருகில் நின்று செல்லும்படி உத்தரவிட்டுள்ளனர். முதல்வரிடம் கோரிக்கை சில மணி நேரங்களில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sivagangai-cm-mk-stalin-college-student-request-bus-stop-tamil-news-8645322