ஆன்லைன் ‘சந்தேக பதிவேடு’ தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், ஆறு லட்சம் மோசடி பரிவர்த்தனைகளை மத்திய அரசு முறியடித்து, ரூ.1,800 கோடியை பாதுகாத்துள்ளது என்று உள்துறை அமைச்சகத்தின் வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளது.
நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் (என்சிஆர்பி) அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த பதிவேட்டில், நிதி மோசடி மற்றும் பல்வேறு சைபர் குற்றங்களுடன் தொடர்புடைய 1.4 மில்லியன் சைபர் குற்றங்களின் தரவுகள் உள்ளன.
செப்டம்பர் 10 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தொடங்கப்பட்ட ஆன்லைன் சந்தேக பதிவேடு, இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மூலம் உருவாக்கப்படது. இதனை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் மத்திய விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்புகள் அணுக முடியும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த பதிவேடு உருவாக்கப்பட்டது. இது மத்திய நிலை தரவுகளை ஆராயும் வகையில் அமைந்துள்ளது.
இப்படி உருவாக்கப்பட்ட சந்தேக பதிவேட்டின் தரவுகள் மூலம், நிதி அமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும். இதற்காக தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் தரவுகளை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் சைபர் மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய முடியும்" என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த பதிவேட்டின் உதவியுடன் சுமார் 6.10 லட்சம் மோசடி பரிவர்த்தனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வரை சுமார் ரூ. 1,800 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த முயற்சியில் பங்கேற்க அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்ததாகவும், இந்தப் பதிவேட்டை பயன்படுத்த அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/cyber-shield-india-blocked-online-fraud-90-days-8617893