ஞாயிறு, 26 ஜனவரி, 2025

அடுத்த மத நம்பிக்கைய மதிக்கிறாரு

 நேத்து நைட்டு ஒரு 10மணி இருக்கும்..

.பசி எடுத்துச்சேனு ரோட்டோர கடைல இட்லி சாப்பிட உக்காந்தேன்.. அது ஒரு பாய் கடை...
.
அந்த கடைல இட்லி, புரோட்டா, ஆம்ப்லேட்னு இருந்துச்சி..
.
அடிக்கடி அந்த வழியா போறவன் தான்.. எப்பயாவது பசிச்சா அங்க சாப்பிடுவேன்..
.
நேத்து சனிக்கிழமை.. நான் அசைவம் சாப்பிட மாட்டேன்.. அதுனால இட்லி மட்டும் வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தேன்..
.
அப்ப மாலை போட்ட ஒரு 4 பேரு வந்தாங்க.. 4தோசை போடுங்கனு சொன்னாங்க..
.
அதுக்கு அந்த ஓனர் பாய் சொன்னாரு.. இங்க வேணாம் சாமி.. ஒரு 4 கடை தள்ளி போங்க அங்க சைவ ஓட்டல் இருக்குனு சொன்னாரு..
.
ஏன்னு அவங்க கேக்க.. இதே தோசை கல்லுல தான் ஆம்ப்லேட் போடுறேன்.. சிக்கன் ப்ரை பன்றேன்.. அதே கல்லுல தோசை போட்டு தான் உங்களுக்கு தரணும்..
.
என்ன தான் தண்ணி ஊத்தி கழுவுறேன்னாலும் அது சரி வராதுங்க..
.
அதே மாதிரி கறி குருமா சட்டி, சாம்பார் சட்டிலாம் ஒரே இடத்துல தான் இருக்கு.. எனக்கே தெரியாம கரண்டிய கூட மாத்தி போட்ருப்பேன்..
.
சாதாரனமா இருந்தா பரவால.. மாலை போட்ருகீங்க.. தெரிஞ்சே செய்ய கூடாதுலனாரு..
.
சரிங்கனு அவங்களும் அடுத்த கடைய பாத்து போயிட்டாங்க..
.
4 பேரு.. நல்லா சாப்பிட்டிருந்தா ஒரு 200 ரூவா வியாபாரம் ஆகிருக்கும்..அந்த வியாபாரம் போனாலும் பரவாலனு அடுத்த மத நம்பிக்கைய மதிக்கிறாரு.. அதை நினச்சி பிரம்பிப்பா தான் இருந்துச்சி..
.
அடடா.. இது புரியாம நாம இங்க வந்துட்டோம்.. இனிமே சனிக்கிழமை வரக்கூடாது.. ஆனா நேரம் கிடச்சா மத்த நாள்ல பசிச்சா இங்க தான் வரணும்னு முடிவு பண்ணினேன்...
.
இது மாதிரி மனிதர்களும் இருக்காங்க.. அடுத்த மதத்த மதிக்கிறது, அவங்க கூட ஒற்றுமையா போறதுனு..
.
இது மாதிரி மனிதர்களால தான் இன்னுமும் இந்தியா உடையாம இருக்கு...
#Credits : mohan
Copy and pasted