சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப் நியூமோ வைரஸ் (ஹெச்.எம்.பி.வி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தொற்று குறித்து பயப்படத் தேவை இல்லை எனவும், ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த 5 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் புதுவை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/puducherry-child-tests-positive-for-hmpv-discharged-from-hospital-tamil-news-8610940