ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கடைசி நாளில் 56 வேட்பு மனுக்கள் தாக்கல்
17 1 2025
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளான இன்று தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமார் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் தாக்கல் செய்தார். இதேபோல், தி.மு.க-வுடன் நேரடி போட்டி போடும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார்
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் கடைசி நாளான இன்று மட்டும் மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்ட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/erode-east-bypoll-dmk-ntk-candidates-file-nominations-tamil-news-8630974