கோவை மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தேசிய அளவிலான பைக் ரேஸில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பந்தய வீரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்டனர்.
கோவை கொடிசியா தொழிற் கூட கண்காட்சி வளாகம் செல்லும் வழியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கோவை மாநகர மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தேசிய அளவிலான பைக் ரேஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26)நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தேசிய அளவிலான பைக் ரேஸ் நடைபெறுவதால் தமிழ்நாடு கேரளா கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர் பைக் ரேஸ் நடைபெறுவதை ஒட்டி கோவை மாவட்டத்தை சேர்ந்த இருசக்கர வாகன பிரியர்கள் ஆர்வத்தோடு இந்த காட்சியை கண்டு களித்தனர்.
குறிப்பாக ஆஃபர் என்று சொல்லக்கூடிய கருட புலனான சாலைகளில் பைக் ரேஸர்கள் சீறிப்பாய்ந்து சென்ற காட்சி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பல்வேறு சுற்றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றில் கிடைக்கப்பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/bike-race-behalf-dmk-youth-and-students-wing-8656088