திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாட்டில் பேசிய, தி.மு.க எம்.பி ஆ.ராசா, திராவிடம் என்பது வெறும் சமூக நீதி மட்டும் அல்ல. சாதி, மதம் இல்லாத தமிழ் சமுதாயம் இந்த மண்ணில் இருந்தது. அந்த மாண்பை மீட்டெடுப்பது தான் திராவிடம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க சட்டத்துறை 3-வது மாநில மாநாடு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை நீர்வளத்துறை அமைச்சரும் திமுகவின் பொது செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய எம்.பி. ஆ.ராசா, ஆரியம் திராவிடம் குறித்து பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திராவிடத்தால் அமைந்த நன்மைகளை மறந்துவிட்டு பேசுவோர் நடமாடும் இந்த நேரத்தில், திராவிடவியல் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன். ஒரு காலத்தில் நிலத்தால் மொழியால் வரையெறுக்கப்பட்ட திராவிடம் வாழ்ந்தது. தண்ணீர் தொடங்கி உண்ணும் உணவு வரை, பண்பாட்டில் திராவிடத்தின் அடையாளங்கள் இருந்து வருகிறது. திராவிடம் இல்லை என்று சொல்பவர்கள், ஆரியம் இல்லை என்று சொல்வார்களா?
நிர்மலா சீதாராமன் வரை பலரும் ஆரியம் இருப்பதையும், அதன் வரலாற்றையும் பண்பாட்டையும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆரியம் இருக்கிறது என்ற காரணத்தால் திராவிடம் மறுக்கப்பட வேண்டுமா? பெரியாரை விமர்சிப்பவர்களுக்கு நாணயம் வேண்டும். அந்த நாணயம் எதிர்தரப்பில் இரு்பபவர்கய் யாருக்கும், இல்லை பெரியார் ஒரு ஆணாக பிறந்து பெண்ணுக்கான போராடியவர். முதலாளியாக பிறந்து தொழிலாளிக்கான போராடியவர்.
உயர்சாதியில் பிறந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர் பெரியார். இப்படிப்பட்ட்ட ஒரு அடையாளத்தில், இந்தியாவில் இன்னொரு தலைவர் இல்லை. பெரியாரையும் அம்பேத்கரையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்த முடியுமா? இப்படி நிறுத்தாத எவனும் மூளை உள்ளவனாக கருதக்கூடாது. இந்த ஹிந்துயிசத்தில் 4 தான் இருக்கிறது. வித்தயாசமான சமநிலை, தரம்பார்க்கும் கல்வி, பெண் உரிமையை கட்டுப்படுத்ததல், வசதியானர்களுக்கு முன்னுரிமை இந்த 4 தான் இந்து மதத்தின் தத்துவம் என்று அம்பேத்கர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு உரிமை கொடுக்காதே, பெண்களுக்கு கல்வி இல்லை, பெண்களுக்கு சொத்து இல்லை என்று இந்து மதத்தின் தத்துவங்களை பெரியார் சொன்னபோது உங்களுக்கு கோபம் வரவில்லை. அம்பேத்கரும் தனது புத்தகத்தில் அதைதத்தான் சொன்னார். அதனால் தான் அவர்கள் இருவரையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்துகிறோம். இந்த மத தத்துவங்களை கொண்டு வந்தது ஆரியம். இதை மறுத்தது திராவிடம். அதை மறுத்தவர் பெரியார்.
பெரியார் மறுத்ததை சரி என்று சொன்னவர் அம்பேத்கர். எனக்கு இருக்கும் ஒரு தலைவர் அம்பேத்கர் என்று பெரியார் சொன்னார். தமிழ்நாட்டு மக்கள் என்னிடம் வர வேண்டாம் எனக்கும் சேர்த்து தலைவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்று அம்பேத்கர் சொன்னார். அவர்களுக்கே பிரச்னை இல்லை என்னும்போது உங்களுக்கு என்ன பிரச்னை. இப்போதைய காலகட்டத்தில் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டால் ஆரியம். சமத்துவம் பேசினால் திராவிடம். பெண்ணுரிமை பேசினால் திராவிடம். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசினால் ஆரியம்.
அறிவியல் பேசினால் திராவிடம். மூடநம்பிக்கை பேசினால் ஆரியம். திராவிடம் என்பது வெறும் சமூகநீதி மட்டும் அல்ல. சாதி, மதம் இல்லாத தமிழ் சமுதாயம் இந்த மண்ணில் இருந்தது. திராவிடம் என்பது மொழிக்கான பெருமையும் கூட. இந்த மொழி தான் சமத்துவம் பேசியது. இந்த மொழி தான் அறிவியல் பேசியது. இந்த திராவிட நெறிதான் எங்களுக்கு அடையாளம் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dmk-mp-a-rasa-speech-about-periyar-and-ambedkar-8633563