வெள்ளி, 24 ஜனவரி, 2025

தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் காலம்’ – ராகுல் காந்தி பெருமிதம் !

 23/1/25


தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் “இரும்பின் தொன்மை” புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினை தொடங்கி வைத்தல் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் “இரும்பின் தொன்மை” புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினை தொடங்கி வைத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கீழடி இணையதளத்தினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து, “இரும்பின் தொன்மை” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்லியல் கண்டுபிடிப்புகள் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பின் பயன்பாட்டை வெளிப்படுத்துகின்றன, இது இரும்புக் காலத்தில் இந்தியாவின் ஆரம்ப முன்னேற்றங்களைக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் பங்களிப்புகள்,

நமது தேசம் முழுவதும் எண்ணற்ற மைல்கற்களுடன், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும், குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 



source https://news7tamil.live/the-iron-age-in-tamil-nadu-was-5300-years-ago-rahul-gandhi-is-proud.html