கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.
இதற்கிடையே கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது போலீசார் மற்றும் கிளர்ச்சியளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஐ.நா அமைப்பை சேர்ந்த வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து வன்முறை நடைபெற்று வரும் நிலையில் 1 லட்சம் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி அண்டை நகரங்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் வன்முறையில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/violence-continues-in-africa-death-toll-rises-to-17.html