/indian-express-tamil/media/media_files/DfO6nDIa1V4vwEYdkN2D.jpg)
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம்
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து நாளை(பிப்.18) தி.மு.க தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/february-18-protest-for-dmk-agains-tri-lingual-policy-8727397