ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

தமிழ்நாட்டில் பேசுவதற்கு பிரச்னைகள் இல்லை என்பதால், திருப்பரங்குன்ற விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு!

 சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயிலில் புதுப்பிக்கப்பட்ட திருக்குளத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். பின்னர் கோயிலின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஆன்மீக ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சியில்தான் அதிகமான குடமுழுக்கு நடைபெறுகிறது. 20 திருக்கோயில்களில் நவீன முறையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மன்னராட்சிக்கு பிறகு அதிகமான திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவது என்றால் அது திமுக ஆட்சியில்தான். 2587 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஒரே நாளில் 98 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ரூ.7121 கோடி கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. வேறு எந்த ஆட்சியிலும் இதுபோல கோயில் நிலங்கள் மீட்கப்படவில்லை.

உபயதாரர்கள் வழங்கிய நிதி முழுமையாக கோயில்களுக்கு செலவழிக்கப்படுகிறது. தினமும் பொய்களை கூறும் தலைவர் அண்ணாமலை என்றால் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த தைப்பூசத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டது.

அண்ணாமலை கூறியது போல் கடந்த ஆட்சியில் அதுபோன்று இருந்திருக்கலாம். ஆனால் இந்த ஆட்சியில் ஏதுமில்லை. ஆன்மீகத்தில் தலையிட்டு அரசியலாக்க நினைக்கும் அண்ணாமலையின் கனவு, பகல் கனவாகதான் இருக்கும். அண்ணாமலையின் எண்ணம் முழுவதும் கலங்கப்பட்டுள்ளது. விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அரசு மத்திய அரசு.

தமிழ்நாட்டில் பேசுவதற்கான பிரச்சினைகள் எதுவும் இல்லாததால், திருப்பரங்குன்றம் பிரச்னைகளை கையில் எடுத்துள்ளார்கள் இந்து முன்னணியினர். பாஜகவிற்கு 2026-ல் மக்கள் பதிலடி கொடுக்க தயாராக உள்ளார்கள். திருத்தணி முருகன் கோயில் கோபுரம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்.



source https://news7tamil.live/since-there-are-no-issues-to-talk-about-in-tamil-nadu-the-thiruparankundra-issue-has-been-taken-into-hand-minister-sekarbabu.html