/indian-express-tamil/media/media_files/2025/02/18/uXN65SE12CehgC2x5Hkq.jpg)
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமை தாங்கினார்.
புதிய கல்வி கொள்கை திட்டத்தில் மும்மொழிக் கொள்கை அமுல்படுத்தினால் தான் நிதி வழங்கப்படும் என்று கூறிய மத்திய அமைச்சரை கண்டித்து புதுச்சேரியில் 20-க்கும் மேற்பட்ட சமூக நல இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்மொழி கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி கொடுக்க முடியும் என்ற மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேச்சை வன்மையாக கண்டித்தும், மத்திய அரசு கல்வியை மாநில பட்டியலில் இருந்து பிரித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசை கண்டித்தும், புதுச்சேரியில் 20-க்கும் மேற்பட்ட சமூக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நேரு, “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட உள்ளனர். தமிழில் எழுத படிக்க முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தினால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கது என்றார்.
source https://tamil.indianexpress.com/india/social-welfare-movements-protest-in-puducherry-condemning-the-union-minister-in-three-language-policy-8733328
18 2 25