மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தியும் காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தியும் காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இரண்டு பேர் மீது கடந்த 27 ஆம் தேதி இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் செந்தமிழ் என்ற மீனவர் காலில் குண்டடிபட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை மீட்டு உரிய உயர் சிகிச்சை அளிக்க வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்காத நிலையில் இன்று காரைக்கால் மாவட்டத்திலுள்ள 11 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் முடிவை அடுத்து இன்றிலிருந்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைப்படைகளும் 1000க்கும் மேற்பட்ட பைபர் படைகளும் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மீனவ பிரதிநிதிகள் தொடர்ந்து மீனவர்களை சிறை பிடிப்பதும், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதுமாக இலங்கை அரசு செய்து வருவதையும், ஓட்டுனர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை, மீன்பிடி படகுகளுக்கு ரூபாய் 40 லட்சம் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் இலங்கை அரசிடம், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்ட வேண்டும் எனவும் இல்லையென்றால் போராட்டம் கடுமையாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
source https://tamil.indianexpress.com/india/puducherry-karaikal-fishermen-strike-tamil-news-8711622