24 2 25
/indian-express-tamil/media/media_files/2025/02/15/MEth5Ue11YwBkeuQusGz.jpg)
தற்போது நடைமுறையில் இருக்கும், 1961-ம் ஆண்டின் வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், வழக்கறிஞர்கள் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நடைமுறையில் இருக்கும், 1961-ம் ஆண்டின் வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு சட்ட மசோதாவை, மத்திய சட்டத்துறை மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த வரைவு மசோதா குறித்து வழக்கறிஞர்கள் சங்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு, வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் திருத்த மசோதா சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது:
சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு” என்றார் பேரறிஞர் அண்ணா. வழக்கறிஞர் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் ஆகும். 2014 முதல் நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு பா.ஜ.க அரசு உட்படுத்தி வருகிறது. வழக்கறிஞர்கள் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயர் மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ் மீதான பா.ஜ.க-வின் வெறுப்பு மசோதாவில் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல, அது எங்களின் அடையாளம். இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க கோருகிறது.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-opposes-to-advocate-amendment-bill-2025-8749701