/tamil-ie/media/media_files/uploads/2022/01/NEETPG2.jpg)
மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முதுகலை (NEET PG) 2024க்கான தகுதி சதவீதத்தை மீண்டும் குறைத்துள்ளது. நீட் பி.ஜி தேர்வு தகுதிச் சதவீதம் அனைத்துப் பிரிவுகளுக்கும் ஐந்தாவது சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட மருத்துவ கவுன்சலிங் கமிட்டி அறிக்கை கூறியது: “06.01.2025 தேதியிட்ட தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரிய (NBEMS) அறிவிப்பின் தொடர்ச்சியாகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியும், 2025 பிப்ரவரி 20 தேதியிட்ட கடிதம் எண். U. 12021/05/2024-MEC என்ற கடிதத்தில் நீட் பி.ஜி 2024 தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி சதவீதம் பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளது..”
பொது/ இ.டபுள்யூ.எஸ், பொது/மாற்றுத்திறனாளி மற்றும் எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி (SC/ST/OBC) (மாற்றுத்திறனாளி உட்பட) ஆகியவற்றில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச தகுதி சதவீதம் 5வது சதவீதமாகும். இருப்பினும், ஆகஸ்ட் 23, 2024 அன்று வெளியிடப்பட்ட நீட்-பி.ஜி 2024 தரவரிசை மற்றும் சதவீத மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் இல்லை என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தேசிய மருத்துவ கவுன்சில் அனைத்து பிரிவுகளுக்கும் கட்-ஆஃப் சதவீதத்தைக் குறைத்தது. பொது மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவு மாணவர்கள் 15 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றனர். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனவரியில் அறிவிக்கப்பட்ட நீட் முதுகலை கவுன்சிலிங்கிற்குத் தகுதி பெறுவதற்குத் தேவையான திருத்தப்பட்ட கட்-ஆஃப் 10 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்.
நீட் முதுகலை கட்-ஆஃப் சதவீதம் பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதமாகவும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 45 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 40 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு, அனைத்து பிரிவுகளிலும் நீட் முதுகலை தகுதி சதவீதம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. பொதுப் பிரிவினருக்கான நீட் பி.ஜி கட்-ஆஃப் 2022ல் 50வது சதவீதத்தில் இருந்து 35வது சதவீதமாக குறைக்கப்பட்டது. பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கான கட்-ஆஃப் 45 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி.,யின் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கீழ் உள்ள மாணவர்களுக்கான கட்-ஆஃப் 40 சதவீதமாக குறைக்கப்பட்டது.
source https://tamil.indianexpress.com/education-jobs/neet-pg-2024-minimum-qualifying-percentile-reduced-again-8759240