வியாழன், 13 பிப்ரவரி, 2025

தி.மு.க கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு; இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்

 stalin rahul

திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் தற்போது மக்களவைத் தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% அதிகரித்துள்ளதாகவும் இந்தியா டுடே- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மக்களின் தற்போதைய மனநிலை குறித்து இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதன்படி தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 343 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும் பாஜக தனிப்பெரும்பான்மை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

2024 மக்களவைத் தேர்தலில் 232 இடங்களில் வென்ற காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, இன்று தேர்தல் நடைபெற்றால் 188 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது தேர்தல் நடத்தினாலும் திமுக தலைமையிலான கூட்டணியே 39 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்றால் 52 விழுக்காடு வாக்குகளைக் கைப்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அ.தி.மு.கவின் கூட்டணி வாக்குகள் 3% சரிந்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.


source https://tamil.indianexpress.com/tamilnadu/india-today-cvoter-poll-who-would-get-how-many-votes-in-tamilnadu-8715879