புதன், 12 பிப்ரவரி, 2025

சென்னை ஐகோர்ட், மதுரை கிளைக்கு புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

 High Court News Update

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது குறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றங்களில், அரசு தரப்பில் வாதாட கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்க கடந்தாண்டு டிசம்பர் 20 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில் எடுத்த முடிவுகளின் படி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், வாதாட, வேத பகத் சிங், புருசோத்தமன், செந்தில் முருகன், பரணிதரன், ஹர்ஷாராஜ் உள்ளிட்ட 8 வழக்கறிஞர்கள் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அஸ்வினி தேவி, சித்தார்த், சரவணன், இந்துபாலா உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக பாஸ்கரன், உதயகுமார் உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உமாகாந்த், கருணாநிதி, வெங்கட சேசய்யா உள்ளிட்ட 16 வழக்கறிஞர்கள், உரிமையியல் தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் வழக்கறிஞர்களாக ஆஜராவார்கள். வரி தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் அஜாராக வழக்கறிஞர் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக எப்.தீபக், எம்.லிங்கதுவை, சி.வெங்கடேஷ் குமார் ஆகியோரும், கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக எஸ்.மாதவன், கே.மாலதி, பி.ராமநாதன் ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள். குற்றவியல் வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களாக கே.ஞானசேகரன், எஸ்.எஸ்.மனோஜ், எம்.கருணாநிதி, எஸ்.பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிவில் வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களாக எஸ்.ஜெய பிரியா, எஸ்.வினோத், எம்.கங்காதரன், பி.பி.அகமத் யாஸ்மின் பர்வீண், ஏ.ஒலிராஜா, கே.ஆர்.பதுரஸ் ஜாமன் ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள். மொத்தமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் 39 புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழக்குகளில் அரசு தரப்பிற்கு ஆஜராகி வாதாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-appointed-39-lowers-in-high-court-chennai-and-madurai-branch-8712111