புதன், 12 பிப்ரவரி, 2025

மன்ஹஜூ ஸலப் எனும் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொண்டு நபித்தோழர்களின் கருத்து மார்க்கம் என்று பிரச்சாரம் செய்கிறீா்கள்

அப்பாஸ் அலி அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
விவாத அழைப்பை ஏற்றுக் கொண்டதாக நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது.
அல்ஹம்துலில்லாஹ்.
பொதுவெளியில் தாங்கள் செய்து வரும் பிரச்சாரத்திற்கும் கடிதத்தில் நீங்கள் எழுதியதற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது.
மன்ஹஜூ ஸலப் எனும் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொண்டு நபித்தோழர்களின் கருத்து மார்க்கம் என்று பிரச்சாரம் செய்கிறீா்கள்
நபித்தோழர்களை பின்பற்றுவது கட்டாயம் எனவும் கூறிவருகிறீர்கள்
மார்க்கம் மறுக்காத விஷயங்களில் முன்சென்ற நல்லோர்கள் கருத்து மார்க்க ஆதாரமாகும் எனவும்
முன்சென்ற நல்லோர்கள் இறைச்செய்தியை விளங்கியதை போன்றுதான் நாமும் விளங்க வேண்டும். அதற்கு மாற்றமாக புரிவது வழிகேடு என்ற அளவில் பிரச்சாரம் செய்து வருகிறீா்கள்.
இதையெல்லாம் உண்மை என்று நம்பி மக்களையும் இக்கொள்கையின் பால் அழைத்து வருகிறீர்கள். இதைத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாகிய நாங்கள் வழிகேடு என்கிறோம். இதற்காகவே உங்களை விவாதத்திற்கும் அழைத்தோம். ஆனால் உங்களின் விவாத அழைப்பு ஏற்பு கடிதத்தில் உங்களின் நிலைப்பாட்டை மழுப்பியுள்ளீர்கள். உங்களின் நிலைப்பாடு தெளிவற்றதாக உள்ளது.
எனவே பின்வரும் விஷயங்களில் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தினால் விவாத தலைப்பை முடிவு செய்ய உதவியாக இருக்கும். இதில் எதை நீங்கள் ஏற்கவில்லையோ அதை விவாதிக்க வேண்டிய தேவையில்லை.
1.மன்ஹஜூ ஸலப் எனும் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லையா?
2. இஜ்மா (ஒருமித்த கருத்து) என்பது மார்க்கத்தின் ஆதாரமாக கொள்ளத்தக்கதா?
3.நபித்தோழர்களின் கருத்து மார்க்கம் ஆகுமா?
4. நபித்தோழர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் மார்க்க ஆதாரமா?
5.நபித்தோழர்களை பின்பற்றுவது கட்டாயமா?
6.மார்க்கம் மறுக்காத விஷயங்களில் முன்சென்ற நல்லோர்கள் கருத்து மார்க்க ஆதாரமாகுமா?
7.முன்சென்ற நல்லோர்கள் இறைச்செய்தியை விளங்கியதை போன்றுதான் நாமும் விளங்க வேண்டுமா?
8. அவர்கள் விளங்கியபடி செயல்படுவது மார்க்கத்தின் பார்வையில் கட்டாயமா?
இவற்றை நீங்கள் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தங்கள் தரப்பிலிருந்து இதற்கான பதில் வந்ததும் ஒப்பந்தம் பற்றி முடிவு செய்து விடுவோம் இன்ஷா அல்லாஹ்.
உங்களின் விவாத அழைப்பு ஏற்பு கடிதத்தில் உள்ள திசைதிருப்பும் விஷயங்களை இவ்விவாதத்துடன் நேரடியாக தொடர்பு இல்லாதததால் நாங்கள் பதிலளிக்கவில்லை.





இப்படிக்கு,
முஜிபுர் ரஹ்மான்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.