வியாழன், 22 ஜனவரி, 2026

முதல் முறை வெளிநாடு ட்ரிப் போறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பாக தெரிஞ்சு வசிக்கோங்க

 பயண ஆவணங்கள்

வெளிநாடு செல்ல வேண்டும் என்றாலே பாஸ்போர்ட் கண்டிப்பாக வேண்டும். அப்படி நீங்க ட்ரிப் பிளான் பண்ணுனதும் உடனே பார்க்க வேண்டியது உங்க பாஸ்போர்ட் காலாவதி டேட் எப்போது என்பது தான். பாஸ்போர்ட் வெறும் செல்லுபடியாகும் தேதியை மட்டும் பார்க்காமல், நீங்கள் திரும்பி வந்த தேதியில் இருந்து குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு மேல் வேலிடிட்டி இருக்கிறதா என உறுதியாக செக் பண்ணுங்க. சில நாடுகள் இதில் ரொம்ப கண்டிப்பா இருப்பாங்க. பாஸ்போர்ட்டோட முதல் மற்றும் கடைசி பக்கத்தோட ஸ்கேன் காப்பி அல்லது போட்டோவை உங்க மெயில் போன்ற எதாவது இணைய தளத்தில் கண்டிப்பாக சேவ் பண்ணி வெச்சிக்கோங்க.

முன்கூட்டியே விசா விண்ணப்பம்

ஒரு நாட்டிற்கு செல்வதற்கு முன்பே அங்கு விசா வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சில நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவைப்படாது. அப்படி விசா தேவை என்றால் அதை விண்ணப்பிக்க முன்னாடி அந்த நாட்டோட தூதரகம் அல்லது இணையதளத்தில் என்னென்ன டாக்குமெண்ட்ஸ் தேவை என தெளிவாக தெரிஞ்சுக்கோங்க. கடைசி நேரத்துல அவசரம் இல்லாமல், குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு முன்பே விண்ணப்பிச்சுடுங்க. விசா அப்ரூவல் ஆன காப்பியை பிரிண்ட் எடுத்து வச்சுக்கோங்க. 

விமான மற்றும் தங்குமிட முன்பதிவுகள் 

ஒரு ட்ரிப் பிளான் பண்ணிட்ட அடுத்ததா நாம பாக்க வேண்டியது விமான டிக்கெட் கட்டணம் மற்றும் தங்குமிடம் தான். விமான டிக்கெட், தங்கும் இடம்  எல்லாத்தோட கன்ஃபர்மேஷன் டீடைல்ஸையும் மொபைல்ல சேவ் பண்ணி வெச்சதோட, ஒரு பிரிண்ட் அவுட்டும் எடுத்து வச்சுக்கோங்க. ஏர்போர்ட்லயோ இல்ல தங்குற இடத்துலயோ நெட்வொர்க் பிரச்னை இருந்தால் இது உதவும். 

பயண காப்பீடு 

டிராவல் இன்சூரன்ஸ் எடுக்கும்போது அதில் மருத்துவ செலவுகள் மட்டும் இல்லாமல், உங்கள் உடைமைகள் தொலைந்து போனால், விமானம் கேன்சல் ஆனால், அல்லது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நாள் தங்க நேரிட்டாலும் எல்லாத்தையும் கவர் பண்ற மாதிரி ஒரு நல்ல பாலிசியா பார்த்து எடுங்க. பாலிசி டாக்குமெண்ட்டோட காப்பியை உங்க கூட வச்சுக்கோங்க. அவ்வளவு தான், இது எல்லாம் இருந்தா சேஃபா ட்ரிப் போய்ட்டு வரலாம்.


source https://tamil.indianexpress.com/international/first-time-international-trip-must-know-these-things-read-full-story-11018614