மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி 'வெள்ளகாளி' (எ) காளி என்பவர் மீது மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் உணவகத்தில் போலீசார் உணவருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தியிருந்தனர். அப்போது, 2 கார்களில் வந்த சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
வெடிகுண்டு சத்தத்தால் நிலைகுலைந்த தருணத்தைப் பயன்படுத்தி, அந்த கும்பல் கைதி வெள்ளகாளியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது. தடுக்க முயன்ற போலீஸ் வாகன ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த தாக்குதலில் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகிய 2 காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/perambalur-country-bombs-thrown-at-police-escort-two-cops-hospitalized-after-brutal-attack-eps-nainar-slams-dmk-11027950





