/indian-express-tamil/media/media_files/2026/10/11/cjp-pc-2026-10-11-14-35-19.jpg)
எழுதியவர்: மஜித் ஆலம்
CJP Protest Delhi Latest News Live: தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த திட்டமிடப்பட்ட மூன்று நாட்களுக்கு முன்பு, (அக்டோபர் 7) அறிவிப்புக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது எனக் கூறி, போராட்டத்திற்கு சி.ஜே.பி அனுமதி கோரிய நிலையில், டெல்லி காவல்துறை அக்டோபர் 9-ந் தேதி இந்த அனுமதியை நிராகரித்தது. ஆனாலும் டெல்லியில் ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி-யின் போராட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய டெல்லி முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி காவல்துறை மதுபானக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், லுடியன்ஸ் டெல்லி (Lutyens' Delhi) நோக்கிச் செல்லும் போக்குவரத்தைச் சீரமைக்க ஓலா (Ola) மற்றும் உபெர் (Uber) உள்ளிட்ட டாக்ஸி சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மத்திய டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் பிற தங்கும் வசதிகளைக் கொண்ட இடங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு புதிய முன்பதிவுகளைக் கட்டுப்படுத்தவோ அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் அக்டோபர் 8 முதல் 12 வரை டெல்லி காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய ஆயுதக் காவல் படையின் (CAPF) 221 கம்பெனிகளை (சுமார் 23,000 வீரர்கள்) வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து சிஆர்பிஎஃப் (CRPF) படைகள் திரட்டப்பட்டு வருகின்றன.
source https://tamil.indianexpress.com/india/cjp-jantar-mantar-protest-live-updates-delhi-abhijeet-dipke-dhruv-rathee-gyanesh-kumar-row-sir-latest-news-12662061





