17 10 2026
/indian-express-tamil/media/media_files/2026/10/17/17delhipolicetirangamarch-2026-10-17-16-15-38.png)
எழுதியவர்:சாக்ஷி சந்த்
இந்திய தலைமைத் தேர்தவல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக டெல்லியில் சி.ஜே.பி சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த போாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் பல எப்.ஐ.ஆர்-களை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தவல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சில தினங்களாக, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர டெல்லி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே நேற்று (அக்டோபர் 16) சி.ஜே.பி சார்பில், கான்னாட் பிளேஸ் பகுதியில், தேசியக் கொடியை ஏந்துங்கள் என்ற பெயரில் பேரணி நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக டெல்லி காவல்துறை பல எப்.ஐ.ஆர்-களை பதிவு செய்துள்ளது. தடை உத்தரவுகளை மீறியதாகவும், அரசு ஊழியர்களை அவர்களின் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகவும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், போராட்டம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்-களின் துல்லியமான எண்ணிக்கையையோ அல்லது இவ்வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துப் பிரிவுகளையோ அதிகாரிகள் வெளியிடவில்லை. வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி சி.ஜே.பி மற்றும் பிற அமைப்புகள் அறிவித்த போராட்டங்களில் இருந்தே இவ்வழக்குகள் உருவாகியுள்ளன.
நேற்று (அக்டோபர் 16) டெல்லி சென்ட்ரல் பார்க் மற்றும் பாலிகா பஜார் அருகே கூட்டமாகப் திரண்ட 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் தடுப்புக் காவலில் எடுத்ததாகத் தெரிவித்தனர். கான்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் மாலை 5 மணிக்குத் திட்டமிடப்பட்ட பேரணிக்கு முன்னதாக, சி.ஜே.பி நிறுவனர் அபிஜித் திப்கேவுக்கு டெல்லி காவல்துறை அனுப்பிய நோட்டீஸில் உரிய அனுமதியின்றி பேரணியை நடத்தக் கூடாது என அதில் தடை விதிக்கப்பட்டது.
மேலும் கான்னாட் பிளேஸில் ஒன்று கூடுமாறு மக்கள் முன்வைத்த பொது அறிக்கைகள் மற்றும் சமூக வலைத்தள வேண்டுகோள்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் சுட்டிக்காட்டிய அந்த நோட்டீஸில், கான்னாட் பிளேஸ் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் அல்ல, தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகே அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்களை நடத்த முடியும். அப்பகுதியின் தீவிர வணிகத் தன்மை, அதிக அளவிலான வாகன மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்து, குறைந்த அளவிலான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் உள்ளன.
இந்த பகுதியில் அனுமதியற்ற கூட்டம் போக்குவரத்தை முடக்கும் கூட்டத்தைக் கலைப்பதைச் சிரமமாக்கும். மேலும் குறுகிய சேவைச் சாலைகள் மற்றும் பழமையான கட்டிடங்கள் இருப்பதைச் இருக்கிறது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் நடமாட்டத்திற்கு இடையூறுகள் ஏற்படக்கூடிய அளவில் இருக்கிறது என்றும் காவல்துறை நோட்டீஸில் கவலை தெரிவிக்கப்பட்டது.
சி.ஜே.பி கட்சியின் முந்தைய போராட்டங்களைக் குறிப்பிட்ட காவல்துறை, கடந்த காலப் போராட்டங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல விடுக்கப்பட்ட அனுமதியற்ற அழைப்புகள் வன்முறைக்கும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதத்திற்கும் வழிவகுத்ததாகவும் குற்றம் சாட்டியது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் பிரிவு 163-ன் கீழ் ஏற்கெனவே தடை உத்தரவு அமலில் இருப்பதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/delhi-police-connaught-place-protest-firs-cjp-tiranga-march-12684829





