திங்கள், 26 அக்டோபர், 2026

மழையை 'மிஸ்' பண்ணிய சென்னை:

 

மழையை 'மிஸ்' பண்ணிய சென்னை:

26 10 26
New Project (11)

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது டெல்டா மற்றும் வட இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது. ஆரம்பத்தில் சென்னை - புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த அமைப்பு, தெற்கு நோக்கி விலகிச் சென்றுள்ளதால் சென்னைக்கு கிடைக்க வேண்டிய மழை வாய்ப்பு முழுமையாக தவறிப்போனது.


இருப்பினும், இன்று நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையின் சில பகுதிகள், கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை நேரத்திற்குப் பிறகு இந்த மழைப் பொழிவும் குறையத் தொடங்கும். இதற்கிடையில், வட இலங்கைப் பகுதிகளில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும். காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/heavy-rainfall-alert-low-pressure-system-moves-south-dry-weather-ahead-for-tamil-nadu-school-and-college-holidays-declared-across-districts-12751548