வெள்ளி, 16 அக்டோபர், 2026

இனி பிறந்த குழந்தைகளுக்கும் பென்ஷன்:

 source https://tamil.indianexpress.com/business/national-social-assistance-programme-nsap-scheme-extension-2026-12678385


National Social Assistance Programme NSAP scheme extension 2026

மத்திய அரசின் பென்ஷன் திட்டங்கள் பெயர் மாற்றம்: யாருக்கு எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்? (Image: AI)

மத்திய அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிற ஏழை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க 1995-ல 'தேசிய சமூக உதவித் திட்டத்தை' (NSAP) ஆரம்பிச்சாங்க. இப்போ பிரதமர் நரேந்திர மோடி தலைமையில நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்துல, இத்திட்டத்தை 2026-27 முதல் 2030-31 வரை அடுத்த அஞ்சு வருஷத்துக்கு தொடர்ந்து நடத்த ஒப்புதல் கொடுத்து இருக்காங்க. இதுக்காக மொத்தம் ரூ.53,428 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கு.

இப்போ இந்தத் திட்டத்துக்கும், இதுக்குக் கீழ வர்ற மத்த திட்டங்களுக்கும் புதுசு புதுசா பெயர் மாத்தி இருக்காங்க:

தேசிய சமூக உதவித் திட்டம் இனிமேல் 'பிரதான் மந்திரி சாமாஜிக் சகாயதா யோஜனா'அழைக்கப்படும்.

முதியோர் ஓய்வூதியத் தி?;லொஇஉட்டம் 'பிரதான் மந்திரி விருத்தாவஸ்தா பென்ஷன் யோஜனா'-னு மாறுது.

விதவை ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி விதவா பென்ஷன் யோஜனா'-னு மாறுது.

மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி திவ்யாங்ஜன் பென்ஷன் யோஜனா'-னு மாறுது.

தேசிய குடும்ப நலத் திட்டம் 'பிரதான் மந்திரி பரிவார் லாப் யோஜனா'-னு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்துல சில முக்கிய தளர்வுகளும் நிதியுதவி உயர்வும் கொண்டு வந்திருக்காங்க. இனிமேல் 80% இயலாமை இருக்கணும்னு அவசியம் இல்லை, 40% இயலாமை இருந்தாலே இந்த பென்ஷன் கிடைக்கும். அதுமட்டுமில்லாம, குறைந்தபட்ச வயது வரம்பையும் தூக்கிட்டாங்க. அதனால பிறந்ததுல இருந்தே (0 வயசுல இருந்தே) குழந்தைகள் உதவித்தொகை பெற தகுதியானவங்க.

மாதாந்திர உதவித் தொகையா 0 முதல் 79 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 375-ம், 80 வயதுக்கு மேலே உள்ளவங்களுக்கு ரூ. 625-ம் வழங்கப்படும். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் இன்னும் மூணு மாசத்துல அதிகாரப்பூர்வமா வெளியாகும்.

அதேநேரத்துல முதியோர், விதவை மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் பழையபடியே எந்த மாற்றமும் இல்லாம தொடரும். இந்த விரிவாக்கத்தின் மூலமா நாடு முழுவதும் இருக்குற 3.20 கோடி ஏழை மக்கள் பயன்பெறுவாங்க. இந்தத் திட்டங்களின் பணம் எல்லாமே நேரடியா பயனாளிகளின் வங்கி கணக்குலயே (DBT) போய்ச்சேரும்.