சனி, 16 ஜூலை, 2016

மெய்யான சுயாட்சி எனும் சரியான தீர்வை நோக்கி சகலரின் கவனமும் திரும்பட்டும்.

ரத்தகண்ணீர் வடிக்கிறது காஷ்மீர்
மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுகொல்லப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள்
திரண்டு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் என்றால் அங்கே மத்திய-மாநில அரசுகள்
மக்களிடமிருந்து எவ்வளவு தனிமைப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. அப்படியெ
னில் அங்குள்ள பலதரப்பட்டவரோடும் ஓர் அர்த்தமுள்ள உரையாடலை நடத்துவதே சரி
யான தீர்வாக இருக்கும். ஆனால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக
அதற்கு பதிலாக அந்த மக்கள்மீது துப்பாக்கிசனியன்களை பிரயோகத்துள்ளது. அதில்
பலியானவர்கள் எண்ணிக்கை 30 க்குமேல் சென்றுள்ளது, பலநூறுபேர் படுகாயம் பட்டி
ருக்கிறார்கள். மக்களின் கண்களை பறிக்கும் வினோத குண்டுகள் வீசப்பட்டிருப்பதாக
செய்திகள் வருகின்றன. ரத்தகண்ணீர் வடிக்கும் காஷ்மீர் கண்டு நெஞ்சம் தவிக்கிறது.
1978ல் நான் அந்த அழகான பூமிக்கு சென்றேன்; இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என்பது
உண்மைதான் என்பதைக் கண்டேன். அன்று அங்கே அமைதி தவழ்ந்தது. ஆண்டுகள்
ஓடஓட மேலும் மேலும் அமைதிதானே அடர்ந்திருக்க வேண்டும்? மாறாக ஏனிந்த தலை
கீழ் மாற்றம்? நிச்சயம் பிரதான குற்றவாளி மத்தியஅரசே. மதச்சார்பற்றகட்சி எனப்பட்ட
காங்கிரசே பொறுப்போடு நடந்துகொள்ளவில்லை என்றால் மதவெறி பாஜக பற்றி
சொல்ல வேண்டுமா என்ன?அரசு அடக்குமுறை ஒருபோதும் மக்களின் நம்பிக்கையை
பெறுவதற்கு மாற்று ஆகாது. அதுபோல, பிரிவினைவாதம் ஒருபோதும் அந்த அடக்கு
முறைக்கு மாற்று ஆகாது. மத்தியில் மெய்யான கூட்டாட்சி, மாநிலத்தில் மெய்யான
சுயாட்சி எனும் சரியான தீர்வை நோக்கி சகலரின் கவனமும் திரும்பட்டும்.

Related Posts: