பொன்னமராவதி, ஜூலை.24 -
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனையினை மாவட்டசெயலாளரும், வீட்டு வசதி வாரியத்தலைவருமான பி.கே.வைரமுத்து மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட சேர்மன் ராமையா, நகராட்சி சேர்மன் ராஜசேகரன்,அம்மா பேரவை மாவட்டசெயலாளர் நெடுஞ்செழியன், வக்கீல் ராமநாதன், வீரமணி, ஒன்றியச் செயலாளர் அழகுசுப்பையா, பேரூராட்சித்தலைவர் ராஜா அம்பலகாரர் துணைசேர்மன் மீனாள் முருகப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆவடித்தேவன், அவைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய பொருளாளர் டேவிட் பழனிச்சாமி, நகரச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி காரையூர் பாரதி சிதம்பரம், கொப்பனாப்பட்டி தலைவர் மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி, ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
