சம உரிமை மறுப்பு - மக்கள் எதிர்ப்பு
பழங்கள்ளிமேடு கோவில் திருவிழா நிறுத்தம்
பழங்கள்ளிமேடு கோவில் திருவிழா நிறுத்தம்
நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தலித் மக்களுக்கு மண்டகபடி வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. உரிமை அளிக்காவிட்டால் இஸ்லாமிய மதத்துக்கு மாறப்போவதாகவும் அந்த மக்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இரு தரப்பு மக்களிடையே சுமுக தீர்வு காண்பதற்கான நடவடிக்கையாக அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்த விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், ஆணை வரும் வரை திருவிழா நடத்துவதற்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வழிபாட்டில் சம உரிமை மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாக வெளியிட்டது.
தொடர்புடைய வீடியோ: https://youtu.be/XdEOSbGYaU0