செவ்வாய், 26 ஜூலை, 2016

அபத்தத்தையும் ஆபத்தையும் இனியாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை உலகத்தின் அணுஉலை அனுபவம் (Reactor Years) என்பது தோராயமாக 16,000 ஆண்டுகள் தான். இது எப்படி கணக்கிடப்படுகிறது? உதாரணமாக கூடங்குளத்தில் ஆறு அணு உலைகள் அமைக்கப்பட்டு 60 வருடங்கள் ஓடினால் அது 360 அணு உலை வருடங்கள் என்று கணக்கிடப்படும். அப்படி 16,000 அணு உலை ஆண்டு காலத்தில் 3 மிகப்பெரிய விபத்துகளும் நூற்றுக்கணக்கான சிறு விபத்துகளும் நடந்துள்ளன. அதாவது, கிட்டத்தட்ட 3500 அணு உலை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய விபத்து ஒன்று நடந்துள்ளது.
அப்படி கணக்கு எடுத்துக்கொண்டால் கூடங்குளத்தில் பத்தில் ஒன்று விபத்து (10 in 1) நடப்பதற்கு வாய்ப்புள்ளது, சரி நூறில் ஒன்று என்றே ஒரு வாதத்திற்கு வைத்து கொள்வோம். நம்முடைய கேள்வி, நூறு விமான பயணங்களுக்கு ஒருமுறை விபத்து நடக்கும் விமானத்தில் நாம் ஏறுவோமா? நிச்சயமாக ஏறமாட்டோம்.
ஒவ்வொரு முறை தொ.கா.விவாதத்திலும் அறிவு ஜீவிகள் விமானத்தில் போகிறோம் விபத்து நடப்பதில்லையா என்று கேள்வி எழுப்புவார்கள். உண்மை என்ன எனில், உலகத்தின் குறைந்த விபத்துகள் நடப்பது விமானங்களில் தான், ஒரு கோடி விமான பயணங்களில் தான் ஒரு விபத்து நடக்கும்.
அணு உலைகளை நியாயப்படுத்த சாலை விபத்துகளையும் விமான விபத்துகளையும் துணைக்கு அழைப்பதன் பின் இருக்கும் அபத்தத்தையும் ஆபத்தையும் இனியாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
https://www.facebook.com/Sundarrajan.Mullai?fref=nf&pnref=story