ஞாயிறு, 31 ஜூலை, 2016

நேபாளத்தில் தமிழர்கள் தவிப்பு - மீட்க முதலமைச்சர் நடவடிக்கை


தமிழகத்தில் இருந்து நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்று, நிலச்சரிவில் சிக்கியுள்ள 10 பேரை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 20ந்தேதி, நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலை கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த 19 பேர் சென்றனர்.
அங்கு நிலச் சரிவு ஏற்பட்டதால், காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 பேர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
அவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தூதரகத்தை அணுகி 10 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

News18

Related Posts: