காணாமல் போன விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்32 விமானம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் விழுந்திருப்பதாக தகவல்...
அங்கு தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த பகுதிவாசிகள், காட்டின் மையப்பகுதியில் விமானம் விழுந்ததை கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை 22ந்தேதி, சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானம் நடுவழியில் காணாமல் போனது. இதில், 29 பேர் பயணம் செய்தனர். 9 நாள் ஆகியும் இதுவரை விமானம் குறித்த உறுதியான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஏஎன் 32 விமானம் விழுந்திருக்கலாம் என்று கருதப்படும் விசாகப்பட்டனம் வனப்பகுதியில் சூரியலங்கா விமானப்படை தள அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் தேடுதல் பணி நடைபெற்றதாக வன பாதுகாவலர் பிரதீப் குமார் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்