சனி, 16 ஜூலை, 2016

பாஜக ஆட்சி தொடர்ந்தால் தபால் நிலையங்களில் திருநீறு, குங்குமம் விற்பனைக்கு வந்துவிடும்: கருணாநிதி குற்றச்சாட்டு


தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்கப்படுவதாக செய்தி வந்துள் ளது. பாஜக ஆட்சி தொடர்ந்தால் தபால் நிலையங்களில் திருநீறு, குங்குமம் ஆகியவை விற்பனைக்கு வந்துவிடும். இந்திய அர சியலமைப்புச் சட்டத்தின் முகவு ரையில் மதச்சார்பற்ற குடியரசு என கூறப்பட்டிருப்பதை இந்த அளவுக்கு கேவலப்படுத்துவதை யாராலும் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் சிறப்பு மருத்துவ படிப்புகளான எம்.சி.எச்., டி.எம். ஆகியவற்றுக்கு 189 இடங்கள் உள்ளன. இதற்கு தமிழக அள வில் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகளுக்கான தேர்வுகளில் தமிழகத்துக்கென இதுவரை இருந்த இடங்களை தற்போது அகில இந்தியாவுக்கும் தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இப் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் முரண்பட்ட செய்திகள் வந்து கொண் டிருக்கின்றன.
வெகு விரைவில் குற்றவாளி களைக் கண்டுபிடித்துவிட்டோம் என மார்தட்டிக்கொள்வதற்காக நிரபராதிகளை குற்றவாளிகளாக ஆக்குகிறார்களோ என பரவலாக சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு காவல் துறையினர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
மத்திய அரசு நடத்திய ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் இதர பிற்படுத் தப்பட்ட (ஓ.பி.சி.) மாணவர்களுக் கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள் ளது. தேர்வு செய்யப்பட்ட 1,078 பேரில் 962 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு சமூக நீதி தத்துவத்துக்கு எதிரான கிரீமி லேயர் முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Posts: