புதன், 13 ஜூலை, 2016

நினைவாற்றல் தரும் வல்லாரை..!


1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.
3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.
4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.
5. சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு.
6. வல்லாரையில் இருவகை உண்டு:
சமவெளி வல்லாரை – வெளிர் பச்சை நிற இலைகளுடையது.
7. மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை:
கரும்பச்சை இலைகளுடையது. இதில் மலைப் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு வீரியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.
8. எனவே தான், இதனை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்.
மருத்துவ குணங்கள்:
1. இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
2. உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
3. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
4. மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
5. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
6. நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
7. அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
8. கண் மங்கலை சரி செய்யும்.
9. சீத பேதியை நிறுத்தும்.
10. இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.
11. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
12. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
13. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
14. வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.
15. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

Related Posts:

  • "சோட்டா பீம்" காட்சி படிமங்கள் மூலம் காவிச் சிந்தனையை புகுத்தும் கயமை. இது அவர்களின் ஒரு நூற்றாண்டு திட்டம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வரைகலையாக… Read More
  • Missing Read More
  • முஸ்லிம்களின் நிலையும் ஊடகங்களின் நயவஞ்சகமும். அவன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவ… Read More
  • வக்பு உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துக்கள் உள்ள நாடு இந்தியாதான். அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பதும் இந்தியாதான். வக்பு என்ற அரபி வார்த்தைக்கு அ… Read More
  • Hadis ஒரு முஸ்லிமுடைய மானத்தோடு விளையாடுவதினால் ஏற்படும் விபரீதங்கள். கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங்களுக்காக… Read More