சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் கிடைத்துள்ள பயன்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தவறானவை என மத்திய தலைமை கணக்காயரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மானியத்தை நேரடியாக பயனாளிகளின் கணக்கில் செலுத்துதன் மூலமும், பயனாளிகள் தாங்களாகவே முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தின் மூலமும் 2014 - 2015 மற்றும் 2015-2016 ஆம் நிதியாண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் தலைமை கணக்காயரின் அறிக்கையில் இந்த இரண்டு திட்டங்களின் மூலம் அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே சேமித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கையில், நேரடி மானியத் திட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவம் கூறப்படுகிறது. அரசு வழங்கும் மானியத் தொகை வெகுவாக குறைந்திருப்பதற்கு காரணம் சர்வதேச சந்தை
http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/business/9/40843/cag-audit-nails-centres-claim-on-lpg-subsidy-saving