சனி, 16 ஏப்ரல், 2022

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை

 வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது,

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அவர், வரும் 19ஆம் தேதி தென் தமிழகம் , மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு. தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20ஆம் தேதி கடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/tami%E1%B8%BBna%E1%B9%AD%E1%B9%ADil-5-na%E1%B9%ADka%E1%B8%B7ukku-ma%E1%B8%BBai-rain-for-5-days-in-tamil-nadu.html

Related Posts: