செவ்வாய், 12 ஏப்ரல், 2022

இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கை வீழ்ந்ததா? பொருளாதார அலசல்

 12 4 2022 2021-22-ல் (ஏப்ரல்-மார்ச்) இலங்கையின் அரிசி உற்பத்தி 13.9% குறைந்துள்ளது. அரசி உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 14.4% ஆக குறைந்துள்ளது. ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசி இறக்குமதி உயர்ந்துள்ளது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 24-ம் தேதி ரசாயன இறக்குமதி தடை உத்தரவை திரும்பப் பெறப்படுவதற்கு முன்னர், மே 6, 2021-ல் கோட்டபய ராஜபக்சே அரசு கனிம உரங்கள் மற்றும் விவசாய ரசாயன உரங்களை இறக்குமதி செய்ய தடை செய்ததன் விளைவு இந்த நெருக்கடி எந்த அளவிற்கு உள்ளது? என்பதை பார்க்கலாம்.

இலங்கையின் அரிசி உற்பத்தியானது 2021-22 ஆம் ஆண்டில் 2.92 மில்லியன் மெட்ரிக் டன்கள் என கணிசமான அளவு குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3.39 மெட்ரிக் டன்களாக இருந்தது. இலங்கையின், உள்நாட்டு உற்பத்தி குறைந்ததன் விளைவாக இலங்கையின் இறக்குமதியை 0.65 மில்லியன் டன் என அமெரிக்க விவசாயத் துறை மதிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2021-22 -ம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட உற்பத்தி 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டின் 2-2.5 மெட்ரிக் டன்கள் என்ற அளவுகளை விட அதிகமாக உள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் இலங்கையின் அரிசி இறக்குமதி 0.75 மெட்ரிக் டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டதை விட அதிகம்.

மனிதன் உருவாக்கியதா Vs இயற்கை உருவாக்கியதா

சமீபத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவின் விளைவுகள் – இயற்கை விவசாயத்திற்கு ஒரே இரவில் முழுவதுமாக மாறுதல் மற்றும் ரசாயன விவசாய இடுபொருட்களை இறக்குமதி செய்ய தடை செய்தல் – இவை அனைத்தும் தீவிரமான விஷயங்கள் இல்லையா? அல்லது குறைந்தபட்சம் 2016-17 மற்றும் 2017-18 இயற்கைப் பேரழிவுகள், நெற்பயிர் பயிரிடப்படும் பரப்பு பெரிய அளவில் சுருங்குவதற்கு வழிவகுத்ததா? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இலங்கையில் மிகப் பெரிய அளவில் பயிரிடப்படுகிற அரிசியில் மட்டுமல்ல, இலங்கையின் நம்பர் 1 விவசாய ஏற்றுமதிப் பொருளைப் பொறுத்தமட்டில் இதே போன்ற ஒரு முடிவு எடுக்கப்படலாம்: 2021-ல் இலங்கையின் தேயிலை உற்பத்தி (299.34 மில்லியன் கிலோ) உண்மையில், 2020-ஐ விட (278.49 மில்லியன் கிலோ) அதிகமாக இருந்தது. ஏற்றுமதியும் 7.7% வளர்ந்தது (அட்டவணை 2ஐப் பார்க்கவும்). மதிப்பு அடிப்படையில் கூட, 2021-ல் அந்நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 1,324.37 மில்லியன் டாலராக இருந்தது. இந்து முந்தைய ஆண்டின் 1,240.9 மில்லியன் டாலர் என்பதைவிட அதிகம்.

ஒரு வகையில், அரசியல் கருத்து தெரிவிப்பவர்களால், கூறப்படுகிற, ராஜபக்சே அரசாங்க நிர்வாகத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இயற்கை வேளாண்மை கொள்கை மட்டுமே விவசாயப் பேரழிவை உருவாக்கவில்லை என்று தெரிகிறது. இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி விவசாயத் துறையைவிட அது பேரியல் பொருளாதாரத்துடன் தொடர்புடையது.

தடை எப்படி செயல்பட்டது

மும்பையில் உள்ள டாடா நிறுவனத்தின் சமூக அறிவியல் பொருளாதாரப் பேராசிரியரான ஆர் ராமகுமார் இந்த ஆய்வில் உடன்படவில்லை. இலங்கையில் ஒரு வருடத்தில் இரண்டு பருவ கால நெற்பயிர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். முதலில், ஒன்று – இந்தியாவின் காரிஃப் பயிருக்கு சமமான ‘யாலா’ – மே-ஜூன் மாதங்களில் நடப்பட்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. இரண்டாவது – ‘மஹா’ அல்லது இந்தியாவின் ரபி பருவ நெல் பயிர் – நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடப்பட்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

ராமகுமாரின் கருத்துப்படி, ‘யாலா’ நெல் நடவு தொடங்கும் போது செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் உள்ளிட்ட பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. யாலா பருவத்திற்கான ரசாயன இடுபொருட்களின் பெரும்பாலான இறக்குமதி அதற்குள் ஏற்கனவே நடந்திருக்கும்.

“மே 6, 2021 உத்தரவு யாலா நெற்பயிர் உற்பத்தியைப் பாதித்திருக்காது. ரசாயன இடுபொருட்களின் பற்றாக்குறை முக்கியமாக மஹா பருவ பயிரை பாதித்துள்ளது. அதன் விளைச்சல் 40-45% சரிவை பதிவு செய்துள்ளது. இந்த தடை நவம்பர் இறுதியில் நீக்கப்பட்டது. இது மஹா பருவ நடவுகளுக்கு மிகவும் தாமதமானதாக இருந்தது” என்று ராமகுமார் கூறுகிறார். இலங்கையின் வருடாந்திர அரிசி உற்பத்தியில் தோராயமாக 60% ‘மஹா’ பயிரிலிருந்து வருகிறது.

இதுவே தேயிலைக்கும் பொருந்திப் போகிறது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 21 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி அதிகரிப்பு என்பது பெரும்பாலும், 2021-ன் முதல் ஐந்து மாதங்களில் நடந்துள்ளது. “கடந்த 3 மாதங்களில் (அக்டோபர்-டிசம்பர் 2020 அக்டோபர்-டிசம்பர் 2020), 12 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது என்பது உண்மையில், பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு 320 மில்லியன் கிலோ என்ற இலக்கை இலங்கை அடைய முடியவில்லை” என்று ராமகுமார் கூறுகிறார். குறைந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் போக்கு புதிய ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் தொடர்கிறது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மே 6, 2021 அரசாணையால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட விவசாயப் பேரழிவிற்கு முந்தையது என்பதும் உண்மை ஆகும்.

ஜூன் 30, 2019-ல் அந்நாட்டின் வெளிநாட்டு நிதி கையிருப்பு (சர்வதேச நாணய நிதியத்தில் வைத்திருக்கும் தங்கம் மற்றும் பணம் உட்பட) அதிகபட்சமாக 8,864.98 மில்லியன் டாலரைத் தொட்டது. பிப்ரவரி 28, 2020-ல் கூட – கோவிட்-19 பரவலுக்கு முன்பு – வெளிநாடு நிதி கையிருப்பு 7,941.52 மில்லியன் டாலராக இருந்தது.

ஆனால், இலங்கையின் சுற்றுலா வருவாய் (2019-ல் ரூ.3,606.9 மில்லியன் டாலரில் இருந்து 2021-ல் 506.9 மில்லியன் டாலராக குறைந்தது). தொழிலாளர்களின் பணம் (6,717.2 மில்லியன் டாலரில் இருந்து முதல் 5,491.5 மில்லியன் டாலரை வரை) வீழ்ச்சியடைந்ததால்,வெளிநாட்டு நிதி இருப்புக்களும் குறையத் தொடங்கின. அவை 2021 மார்ச் இறுதியில் 4,055.16 மில்லியன் டாலராகவும், செப்டம்பர் இறுதியில் 2,704.19 மில்லியன் டாலராகவும், 2021 நவம்பர் இறுதியில் 1,588.37 மில்லியன் டாலராகவும் வீழ்ச்சியடைந்தன. இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தின் சமீபத்திய பிப்ரவரி 2022 புள்ளிவிவரங்கள்படி, மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 2,311.25 மில்லியன் டாலராக உள்ளது, இது 1.3 மாதங்களுக்கும் மேலான இறக்குமதிகளுக்குப் போதுமானது.

இலங்கையில், ரசாயன விவசாய இடுபொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான முடிவு, இயற்கை விவசாயத்திற்கான ஆளும் அரசின் அர்ப்பணிப்பைப் போலவே இருப்புக்கள் குறைந்து வருவதற்கான பிரதிபலிப்பாகவும் இருக்கலாம். உர இறக்குமதிகள் மட்டும் 2020ல் 258.94 மில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. சர்வதேச விலைகள் அதிகரித்து வருவதால், 2021-ல் சாதாரணமாகவே இறக்குமதி கட்டணம் 300-400 மில்லியன் டாலராக உயர்ந்திருக்கும். இறக்குமதியைத் தடை செய்வது/கட்டுப்படுத்துவது, அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாகப் பார்க்கப்பட்டிருக்கலாம்.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியையும், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை விட அதிக விலை கொடுத்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையையும் இந்த மோசமான பொருளாதார கொள்கைதான் பாதித்துள்ளது என்பது வேறு விஷயம்.

source https://tamil.indianexpress.com/explained/sri-lanka-crisis-organic-agriculture-fall-rice-production-and-macro-economy-439755/

Related Posts: