உலகளவில் மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் செயலி, அவ்வப்போது பயனர்களை கவர புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், சில ஐஓஎஸ் பயனாளிகளுக்கு ஏற்கனவே வாய்ஸ் மெசேஜில் வழங்கப்பட்டிருந்த சில கூடுதல் அம்சங்களை, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் தற்போது வழங்கியுள்ளது. இந்த வசதி விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கவுள்ளது. வாட்ஸ்அப் நிறுவன கூற்றுப்படி, ஒரு நாளைக்கு சராசரியாக 7 பில்லியன் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக, நிறுவனம் அந்த அம்சத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது.
வாய்ஸ் மெசேஜில் புதிய வசதிகள்
Out of Chat Playback
இனிமேல் பயனர்கள் சம்பந்தப்பட்ட சாட்டை விட்டு வெளியே வந்தாலும், வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்க முடியும்.
Pause/Resume Recording
வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்கையில், அதை வேண்டுமானால் பாஸ் செய்து வைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. பின்னர், அதனை resume செய்துக்கொள்ளலாம்.
Waveform Visualisation
ஆடியோ மெசேஜ் கேட்கும்போது, ஒலி கேட்பதை பிரதிநிதித்துவம் அலை வரிசை போன்றவற்றை திரையில் காண முடியும். இந்த அம்சமத்தை ஏற்கனவே சில ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
Draft Preview
நீங்கள் ஆடியோ மெசேஜ்ஜை அனுப்பவதற்கு முன்பு அதனை செவ் செய்து, மீண்டும் ஒரு முறை பிளே செய்து சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திவிட்டு அனுப்பும் வசதி உள்ளது.
Remember Playback
நீங்கள் வாய்ஸ் மெசேஜ் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அதனை பாஸ் செய்துவிட்டு, சாட்டை விட்டு வெளியே வந்து வேறு பணிகளை மேற்கொண்டாலும், மீண்டும் வாய்ஸ் மெசேஜ்ஜை முன்பு பாஸ் செய்த இடத்திலிருந்தே கேட்டிட முடியும்.
Fast Playback on Forwarded Messages
வாய்ஸ்மெசேஜ்ஜை உங்கள் விருப்பப்படி 1.5X OR 2X என்ற வேகங்களில் கேட்டுக்கொள்ளலாம். இது அனைத்து விதமான ஆடியோ மெசேஜ்களுகக்கு பொருந்தும்
இந்த புதிய வசதிகளை, வாட்ஸ்அப் அனைத்து பயனர்களுக்கும் வரும் வாரங்களில் வழங்கவுள்ளது. புதிய அம்சங்களைப் பெற, வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வது அவசியமாகும்.
source https://tamil.indianexpress.com/technology/whatsapp-voice-messages-gets-new-features-433686/