சனி, 2 ஏப்ரல், 2022

‘நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது’ – எம்.பி ராகுல் காந்தி

 1 4 2022

நாட்டின் பொருளாதாரத்தை பாஜக சீரழித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு இயற்கையான ஆதரவு கொண்ட மாநிலம் கர்நாடகா என குறிப்பிட்டார்.

மேலும், தற்போது கர்நாடகாவில் உள்ள அரசுதான் நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு என விமர்சித்த ராகுல் காந்தி, அடுத்த சட்டமன்றத் தேர்தலின் போது 150 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை விவகாரத்தில் இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது – ரஷ்யா

மத்தியில் உள்ள மோடி அரசு, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, பண வீக்கமும், வேலைவாய்ப்பின்மையுமே நாட்டின் மிகப் பெரிய பிரச்னைகள் என கூறினார். வேலைவாய்ப்புகளை வழங்கும் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு விட்டதால், பாஜகவே விரும்பினால் கூட நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்தார்.

source https://news7tamil.live/bjp-has-ruined-the-countrys-economy-mp-rahul-gandhi.html