காரை செல்போனில் விட்டுட்டு போய்டாதீர்கள்
கோடை காலத்தில், சூரிய ஒளியின் காரணமாக ஜன்னல்கள் வழியாக வெப்பம் பாய்ந்து, அதிக வெப்பநிலையில், உங்கள் கார் கீரின்ஹவுஸாக மாறிவிடலாம். டெம்பரேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, நிழலான பகுதியில் நிறுத்தப்படும் வாகனத்தின் உட்புறம் இரண்டு மணி நேரத்தில் அபாயகரமான அளவிற்கு வெப்பமடையும்.
எனவே, உங்கள் மொபைலை செல்லப்பிராணியாகவோ அல்லது குழந்தையாகவோ பார்த்துக்கொள்ள வேண்டும். கார் ஆஃப் மற்றும் ஏர் கண்டிஷனிங் இல்லாதபோது, செல்போனை காரில் விட்டுட்டு செல்லக்கூடாது.
நீண்ட நேரம் உங்கள் மொபைலை சூரிய ஒளியில் வைப்பதைத் தவிர்க்கவும்
மனிதர்களைப் போலவே, உங்கள் மொபைலையும் அதிக நேரம் சூரிய ஒளியில் வைத்திருந்தால் அதிக வெப்பமடையும். நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் உங்கள் போனை சார்ஜ் செய்ய வைத்தால் மேலும் மோசமாகிவிடும்.
சார்ஜிங் மற்றும் சூரிய ஒளியின் ஒருங்கிணைந்த வெப்பம், போனின் உட்புற பாகங்களில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
அதிக எனர்ஜி இழுக்கும் செயலிகளை நீக்க வேண்டும்
தற்போது, செல்போன்களில் மல்டி டாஸ்கிங் செய்வதால், எத்தனை செயலிகளை பேக்கிரவுண்டில் ஓடுகிறது என்பதை கண்காணிப்பதில் சிரமம் ஏற்படும். சில செயலிகள், அதிகப்படியான எனர்ஜியை இழுப்பதால், உங்கள் செல்போனின் பேட்டரி வேகமாக குறைந்துவிடும். இதனை கண்டறிய, Settings இல் battery use toolஐ பயன்படுத்தி, எந்த செயலி அதிக எனர்ஜி இழுக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். அதனை ஆஃப் செய்வது மூலம், பேக்கிரவுண்டில் ஓடுவதை தடுத்திட முடியும். இது செல்போனின் அதிகப்படியான செயல்பாட்டை தடுத்து, மொபைல் சூடாகுவதை தடுக்கிறது.
மொபைல் சூடானால், பேக்கேஸை remove செய்யுங்கள்
மொபைல் போன் கேஸ்கள், பல தயாரிப்பாரால் வெவ்வேறு டிசைன்களில் தயாரிக்கப்படுகிறது. இது, அனைத்து ஸ்மார்ட்போன்களும் தெர்மல் என்ஜினியரிங் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்காது என்பதை காட்டுகிறது.
எனவே, மொபைல் போன் சூடாகுவதாக தெரிந்தால், உடனடியாக செல்போனின் பேக்கேஸை நீக்கிவிடுங்கள். இது, வெப்பம் செல்போனை அதிகளவில் இறங்குவதை தடுக்கிறது.
மொபைலுக்கு cooling fan வாங்குங்கள்
நீங்கள் கேம் விளையாடுபவரா இருந்தால், மொபைல் போனுக்கு cooling fan வாங்குவது சிறந்த சாய்ஸ் ஆகும். தற்போது, பல விதமான கூலிங் fan-கள் சந்தையில் உள்ளன. அதனை உபயோகிக்கும் போது, நீண்ட நேரம் கேம் விளையாடுகையில் செல்போனின் செயல்பாடு அதிகமாக இருந்தாலும், போன் வெப்பமடையாமல் தடுத்திடலாம்.
source https://tamil.indianexpress.com/technology/5-tips-and-tricks-to-keep-your-phone-from-overheating-442129/