சனி, 27 ஜூலை, 2024

100 கோடியைத் தாண்டிய மொபைல் நெட்வொர்க் மாற்றுவதற்கான கோரிக்கை! – டிராய் தகவல்!

 

மொபைல் எண் நெட்வொர்க்கை மாற்றுவதற்கான கோரிக்கைகள் 100 கோடியைத் தாண்டிவிட்டதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய்  தெரிவித்துள்ளது.

மொபைல் எண் போர்ட்டபிலிட்டி சேவை(Mobile Number Portability service) என்பது மொபைல் எண் வாடிக்கையாளர் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாறுவது ஆகும். அவ்வாறு மாறும்போது வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய மொபைல் எண்ணையே தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இந்த சேவை ஜனவரி 20, 2011ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதியுடன் மொபைல் எண் நெட்வொர்க்கை மாற்றுவதற்கான கோரிக்கைகள் 100 கோடியைத் தாண்டிவிட்டன என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1.1 கோடி மொபைல் எண் நெட்வொர்க் மாற்றுவதற்கான கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிராய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நாட்டின் முன்னணி நிறுவனங்கள், தொலைப்பேசிக்கான ரீசார்ச் தொகையை 27 சதவிகிதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/demand-for-mobile-network-switching-exceeds-100-crores-telecommunication-regulatory-authority-information.html