வெள்ளி, 19 ஜூலை, 2024

காங்கிரஸின் வளர்ந்து வரும் முகம்;

 

Ragul Gandi And Sudha

2022 இல் பாரத் ஜோத் யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மயிலாடுதுறை எம்பி ஆர் சுதா

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி வழக்கறிஞர் சுதா, அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் தனது குடும்பத்தின் முதல் எம்.பி ஆவார். வன்னியகுல க்ஷத்திரிய சமூகத்தைச் சேர்ந்தவர் (மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது எம்பிசி), சுதா மூன்றாம் தலைமுறை அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சுதாவின் தாத்தா சுயேச்சை எம்எல்ஏவாகவும், பாட்டி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவரது தந்தை பஞ்சாயத்து உறுப்பினராக இருந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா, (46) சிறுவயதிலேயே தந்தையை இழந்த நிலையில், அங்கு 15 அல்லது 16 வயதில் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவது வழங்க்கமாக இருந்த காலக்கட்டத்தில் அவரது அம்மா தனது மகளுக்கு கல்வியை பிரதாணமாக கொடுத்துள்ளார்.

“எனது தந்தை சிறு வயதிலேயே மாரடைப்பால் இறந்தபோது, எனது அம்மா எனக்குக் கொடுத்ததெல்லாம் நல்ல கல்விதான். எனது கல்வி எவ்வாறு மக்களுக்கு உதவும் என்று நான் நினைத்தேன். இதனால் ஒரு வழக்கறிஞராக ஆக முடிவு செய்தேன் என்று கூறியுள்ள சுதா, பொதுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தார்.

2021 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில், மதிய உணவைச் சார்ந்திருக்கும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவு வழங்கக் கோரி சுதா சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவில், “நான் வளரும்போது என் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டவள். ஒவ்வொரு நாளும் பள்ளி உணவை நம்பியிருக்கும் மாணவர்களுக்கு உணவுகளை வழங்க வேண்டும் என்ற சுதாவின் கோரிக்கையை ஏற்ற, ஒரு டிவிஷன் பெஞ்ச் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க உத்தரவிட்டபோது நான் மகிழ்ச்சியடைந்தேன்.

அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில், பெண் மாணவர்களுக்கான பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்களை வைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து சானிட்டரி நாப்கின் இயந்திரங்களை நிறுவ சில பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது என்று கூறியுள்ளார். சுதா குடும்பத்தில் இருந்து தேர்வான முதல் எம்பி என்றாலும்,  மக்களவைக்கான அவரது பயணம் எளிதானது அல்ல.

சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்த சுதா, மாணவப் பருவத்தில் இளைஞர் காங்கிரஸில் இணைந்து முதன்முதலாக காங்கிரஸ் தரவரிசையில் உயர்ந்தார். பின்னர் அவர் மாநில கட்சி பிரிவின் மகளிர் பிரிவின் தலைவரானார். தொடர்ந்து சமீபத்திய மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்த தொகுதியில், அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டார்.

இந்த தேர்தலில், 5.18 லட்சம் வாக்குகள் பெற்ற சுதா, அதிமுக வேட்பாளர் பாபுவை 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, மற்ற அரசியல் கட்சிகள், நான் எனது தொகுதியில் பிறந்தவர் அல்லது இந்த தொகுதியை சேர்ந்தவள் அல்ல என்று சுட்டிக்காட்டினர். ஆனால் எனது தொகுதியில் முடிந்தவரை பலரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கட்டிப்பிடித்து கொண்டே சென்றேன்.

எனது பிரச்சார பாணி சம்பிரதாயமாக வணக்கம் சொல்வதற்கு பதிலாக மக்களை நோக்கி கை அசைப்பது, பலரின் கவனத்தை ஈர்த்தது. நான் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டேன். இது தீண்டாமையை ஊக்குவிக்கும் சாதி அமைப்புக்கு நேரடி சவாலாக அமைந்தது. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்த சில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தபோது, ராகுல்காந்தியின் அணுகுமுறை, எனது அரசியல் அணுகுமுறை மற்றும் பிரச்சாரத்திற்கு உத்வேகம் அளித்தது.

“ராகுல் காந்தி மக்களை பார்த்து கை அசைத்து அவர்களைக் கட்டிப்பிடித்ததை நான் பார்த்தேன், இது அவரைச் சுற்றியிருந்த அனைவரிடமும் உணர்ச்சிப்பூர்வமான மனதைத் தாக்கியது. அதை நான் எனது பிரச்சாரத்தில் முயற்சித்தேன். பிரச்சாரத்தின்போது "நான் வணக்கம் செய்ய முயற்சித்தாலும், அவர்கள் என்னைப் பார்த்து கை அசைத்து என்னைக் கட்டிப்பிடிப்பார்கள் என்று சிரித்தபடி கூறியுள்ளார் சுதா.

தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யாகப் பதவியேற்க முதன்முறையாக மக்களவையில் நுழைந்த நேரத்தை நினைவுகூர்ந்த சுதா, சமூக சீர்திருத்தவாதியான பெரியார், கவிஞர் சுப்பிரமணிய பாரதி மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரை நினைவு கூர்ந்தேன். 18வது லோக்சபாவின் முதல் அமர்வில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதிய சுதா, பார்லிமென்டில் புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிலர் எப்படி படம் எடுக்க முடியும் என்று கேள்வி கேட்டிருந்தார். முந்தைய ராஜ்யசபாவில் வீடியோ எடுத்ததற்காக காங்கிரஸ் எம்பி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

source https://tamil.indianexpress.com/india/r-sudha-tamil-nadu-bharat-jodo-yatra-congress-rahul-gandhi-6237909